பேமெண்ட் வங்கி தொடங்குவதற்கான உரிமம் பெற்ற ஒரு நிறுவனம், வாடிக்கையாளர்களிடமிருந்து ( ஆரம்பத்தில் நபர் ஒருவருக்கு ரூ. 1 லட்சம் வரை) டெபாசிட்டுகளை பெறலாம். மேலும் இண்டர்நெட் பேங்கிங், பண பரிமாற்ற வசதி, இன்சூரன்ஸ் விற்பனை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற சேவைகளை அளிக்கலாம்.

பேமெண்ட் வங்கிக்கும் பிற வங்கிக்கும் என்ன வித்தியாசம்?

இந்தியாவில் உள்ள பிற வங்கிகளைப் போல, பேமெண்ட் வங்கிகள் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்குக் கடன் அளிக்க முடியாது.

டெபாசிட்

இவ்வங்கியில் தனிநபர் 1 லட்சம் ரூபாய் வரை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். இதனால் இத்தகைய வங்கிகள் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் மட்டுமே இயங்க இயலும்.

டெபிட்/கிரெடிட் கார்டு கிடைக்குமா?

கிரெடிட் கார்டு கிடைக்காது. ஆனால் பேமெண்ட் வங்கிகள் ஏடிஎம்./டெபிட் கார்டுகளை வழங்கும்.

பேமெண்ட்வங்கியின் நோக்கம் என்ன?

பேமெண்ட் வங்கி அமைக்கப்படுவதினால் நிதி பரிவர்த்தனை நடவடிக்கைகள் மேலும் அதிகமாகும். குறிப்பாக சேமிப்பு கணக்குகள், பேமண்ட்ஸ் மற்றும் ரெமிட்டன்ஸ் ( remittance ) சேவைகள் கூலித்தொழிலாளர்கள், குறைந்த வருவாய் உடையோர், சிறிய வியாபாரிகள் மற்றும் இதர அமைப்பு சாரா துறை சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் இதர பிரிவினருக்கு கிடைக்கும்.